போட்றா வெடிய.. 'தங்கலான்' ரிலீஸ் தேதி இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,July 19 2024]

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ்க்கு தயாரானதாக கூறப்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தல், ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஏராளமான கிராபிக்ஸ் பணிகளும் தாமதமானதால் ரிலீஸ் தேதி தாமதமானது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராகி விட்டது என்று கூறப்பட்ட நிலையில் ட்ரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் ‘போட்றா வெடிய’ என உற்சாகமாக உள்ளனர்.

விக்ரம் ஹீரோவாக நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பின் ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் ரிலீஸ் ஆனாலும் தனி ஹீரோவாக நடித்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ’தங்கலான்’ திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

More News

சொன்னபடியே வெளியான 'விடாமுயற்சி' அப்டேட். . இந்த முறை த்ரிஷா தரிசனம்..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்

இர்பான் வீட்டில் நடந்த விசேஷம்.. மனைவிக்கு கிலோ கணக்கில் நகை போட்டு அழகு பார்த்த புகைப்படம்..!

யூடியூப் மூலம் பிரபலமாகி அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக தற்போது இருக்கும் இர்ஃபான் வீட்டில் வளைகாப்பு விசேஷம் நடந்ததை அடுத்து

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி ஜோயா.. ஹனிமூன் குறித்த அறிவிப்பு.. வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் ஜோயா. இவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும்

ஷாலினிக்கு கொடுத்த அன்பு முத்தம்.. இதை விட விலை உயர்ந்த பரிசு வேறு என்ன உள்ளது?

அஜித் மனைவி ஷாலினிக்கு அவரது மகன் ஆத்விக் கொடுத்த முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதை விட ஒரு அம்மாவுக்கு விலை உயர்ந்த பரிசு வேற

என்ன ஆச்சு ஜான்வி கபூருக்கு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது