விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து என்பதும் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் விக்ரம் நடித்திருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் இன்னொரு படமான ’துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவான மற்றொரு படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.
’கோப்ரா’ படத்தில் விக்ரம் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அவருடன் பணிபுரிந்தது ஒரு மிகப்பெரிய சந்தோஷமான மாயாஜால நேரங்கள் என்றும் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்றும் அவருடன் பழகிய நினைவுகள் என்றும் எனது மனதில் நீங்காமல் இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த ஆண்டு விக்ரம் நடித்த ’கோப்ரா,’ ‘துருவ நட்சத்திரம்’ ‘மஹான்’ மற்றும் பொன்னியின் செல்வன் என நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Woah!! Finally #ChiyaanVikram sir wraps up his shoot for #Cobra ????.. What a magical experience this has been!! Loveddddddddd working with you sir.. You are for sure an acting monster!! ?????? Shall keep these memories very close to my heart ❤️❤️❤️ pic.twitter.com/rZ98YIkKgU
— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) January 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments