விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,January 06 2022]

சியான் விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து என்பதும் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் விக்ரம் நடித்திருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் இன்னொரு படமான ’துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவான மற்றொரு படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

’கோப்ரா’ படத்தில் விக்ரம் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அவருடன் பணிபுரிந்தது ஒரு மிகப்பெரிய சந்தோஷமான மாயாஜால நேரங்கள் என்றும் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்றும் அவருடன் பழகிய நினைவுகள் என்றும் எனது மனதில் நீங்காமல் இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த ஆண்டு விக்ரம் நடித்த ’கோப்ரா,’ ‘துருவ நட்சத்திரம்’ ‘மஹான்’ மற்றும் பொன்னியின் செல்வன் என நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவருடன் ரொமான்ஸ்: 'ஹலோ டாக்டர்' கிரிஜாஸ்ரீயின் வைரல் புகைப்படங்கள்!

இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு கிரிஜாஸ்ரீயை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாலியல்

ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்

பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோவில் பற்றி தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!

இந்து மதத்தில் கோவில்கள் என்றாலே அதன் திருவுருவச் சிலைதான்

சத்தமே இல்லாமல் அசுர வளர்ச்சி… இந்தியாவிலும் ஒரு குட்டி டெஸ்லா!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியால்

ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.1.10 கோடி சம்பளம்?

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையைத் தொடர்ந்து இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி