close
Choose your channels

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களின் துணை இயக்குனர்.. இப்போது விக்ரம் பட இயக்குனர்..!

Thursday, July 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது விக்ரம் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தில்’ ’தூள்’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படங்களில் இயக்குனர் தரணிக்கு துணை இயக்குனராக பணிபுரிந்தவர் சாந்தகுமார்.

இவர் அருள்நிதி நடித்த ’மௌனகுரு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகி அதன்பின் ஆர்யா நடித்த ’மகாமுனி’ அர்ஜுன் தாஸ் நடித்த ’ரசவாதி’ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரமை சந்தித்து சாந்தகுமார் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை விக்ரமுக்கு பிடித்து விட்டதை அடுத்து, படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குங்கள் என்று விக்ரம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

விக்ரம் தற்போது ’வீர தீர சூரன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்ததும் அவர் சாந்தகுமார் படத்தில் இணைவார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment