பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை இன்னும் திரையுலகினரும் படக்குழுவினருடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை’ வெற்றியை அடுத்து ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை பா ரஞ்சித் தற்போது இயக்கி வருகிறார். காளிதாஸ் ஜெயராம், துஷாரா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை அவர் இரண்டே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சியான் விக்ரமிடம் பா ரஞ்சித் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதையை தற்போது படமாக்கலாம் என விக்ரம் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ’நட்சத்திர நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பா ரஞ்சித் விக்ரம் படத்தை இயக்குவார் என்றும் அதற்குள் விக்ரம் ’சியான் 60’ மற்றும் ‘கோப்ரா’ படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பா ரஞ்சித் படத்திற்கு தயாராகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கிய ’மெட்ராஸ்’ படத்தை தயாரித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்தில் அஞ்சலி!

பிரமாண்ட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல்? பல்லாயிரம் பேருக்கு செலுத்தப்பட்டதாக பகீர் தகவல்!

ஜெர்மனியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தில் பல ஆயிரக்கணக்கான பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புகரைசல் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

வெற்றுடம்பில் 'வெந்து தணிந்தது காடு' சிம்பு: வைரல் புகைப்படம்

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

ஹரி படப்பிடிப்பில் ஏற்பட்ட பரபரப்பு: அருண்விஜய்க்கு என்ன ஆச்சு?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

சியான் விக்ரம் நடித்துவரும் 60வது திரைப்படமான 'சியான் 60' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பில் விக்ரம், துருவ் விக்ரம் உள்பட பலர் கலந்து