அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

சீயான் விக்ரம், தமன்னா நடித்த 'ஸ்கெட்ச்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம் மற்றும் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் 2018ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து இருதரப்பினர்களிடம் விசாரித்த போது விஷ்ணுவர்தன் - விக்ரம் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படம் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஒரு ஸ்டைலிஷான படம் விக்ரம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.