சீயான் விக்ரம் 'இருமுகன்' டீசர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,June 18 2016]

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிங்கப்பூரில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தினங்களில் SIIMA 2016 விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவின் முதல் நாளில் 'இருமுகன்' படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலையும் படக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.