close
Choose your channels

'இருமுகன்' படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

Tuesday, August 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் முதன்முதலில் இரண்டு வித்தியாசமான வேடங்களிலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் முதன்முதலில் இணைந்தும் நடித்த 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று சென்சார் அதிகாரிகள் பார்த்து சென்சார் சர்டிபிகேட் வழங்கியுள்ளனர்.
இந்த படத்திற்கு 'யூஏ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 'இருமுகன்' படத்தின் சென்சார் சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது இன்றைய நாளிதழ்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய விளம்பரம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment