கபாலி' பாணியில் கலக்க வருகிறது 'இருமுகன்'

  • IndiaGlitz, [Friday,August 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'கபாலி'யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்' தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'கபாலி'யை அடுத்து 'இருமுகனும்' சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

More News

'தல 57' இயக்குனர் சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபல இயக்குனர் சிவா தமிழில் இயக்கியது மூன்றே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் அஜித் நடித்த வீரம் மற்றும் 'வேதாளம்'. மேலும் அஜித்துடன் இணைந்து தற்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார்...

சிம்புவின் 'AAA' கதை இதுதானா?

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 9 என அறிவிக்கப்பட்டுள்ள...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன்...

சென்னையில் 'கபாலி' படம் பார்த்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி அமெரிக்கா, கனடா உள்பட உலகின்...

மீண்டும் ஒரு டபுள் ஆக்சன் படத்தில் சரத்குமார்

'நாட்டாமை', 'சூர்யவம்சம்', 'சண்டமாருதம் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்த சரத்குமார் மீண்டும்.....