ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த 'விக்ரம்' பட பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தின் பிரபலம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சற்றுமுன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கிரிஷ் கங்காதரன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார் என்பதும் அதற்கு முன்பே அவர் விஜய் நடித்த ’சர்கார்’ படத்திற்கு பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த பதிவில் ‘கூலி’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
Happy to have you onboard once again @girishganges machi 👍 Cast updates coming soon!#Coolie 🔥 pic.twitter.com/KFBVeBgzcq
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments