முதல் நாளே கமல்-விஜய்சேதுபதி மோதல்? 'விக்ரம்' படப்பிடிப்பு ஆரம்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தயாராக இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’ என்றும் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் விரைவில் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய முதல் நாளில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார். அனேகமாக இருவரும் மோதும் காட்சி படமாக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கும் ’விக்ரம்’ படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த படத்தை குறுகிய காலத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.@RKFI pic.twitter.com/NQUQyuxTQg
— Diamond Babu (@idiamondbabu) July 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout