சூர்யாவின் ஃபயர் காட்சியில் நிஜமாகவே தீப்பற்றிய திரை: 'விக்ரம்' திரையிட்ட தியேட்டரில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் சூர்யாவின் காட்சிகள் ஃபயர் ஆக இருந்தது என அனைத்து தரப்பு ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் புதுவையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘விக்ரம்’ படம் திரையிடப்பட்டு கொண்டிருந்தபோது சூர்யாவின் காட்சியின் போது திடீரென திரை தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே காலப்பட்டு என்ற பகுதியில் உள்ள ஜெயா என்ற திரையரங்கில் ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியின் போது சூர்யா திரையில் தோன்றியபோது திடீரென திரையின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இதனை அடுத்து ரசிகர்கள் அலறி அடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்கு முன்பே திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூர்யாவின் ஃபயர் காட்சியின் போது உண்மையாகவே திரை தீப்பிடித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout