'விக்ரம்' படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர் நிர்வாகம்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு முழுமையாக படத்தை ஓட்ட முடியாததால் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர் நிர்வாகம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ’விக்ரம்’ திரைப்படம் வெளியான நிலையில் இந்தப் படம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதில் அண்ணா பேருந்து நிலையம் உள்ள லட்சுமி திரையரங்கில் ’விக்ரம்’ திரைப்படம் சனிக்கிழமை காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென சவுண்ட் இல்லாமல் ஊமை படம் போல் ஓடியது.
இதனை அடுத்து திரையரங்கில் உள்ள ஆடியோவில் பிரச்சினை இருப்பதாகவும் விரைவில் சரி செய்து விடுவோம் என்றும் ரசிகர்களை தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தினார். ஆனால் 1 மணி ஆகியும் ஆடியோ சரி செய்யப்படவில்லை என்பதால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து பணத்தை திருப்பி கேட்டதால் இது குறித்த விவாதம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ரசிகர்களுக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் இடையே சமரசம் செய்து வைத்தனர். முதலில் பாதி பணம் மட்டுமே தருவோம் என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்த நிலையில் போலீசாரின் அறிவுரைக்கு பின்னர் முழு பணமும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் ’விக்ரம்’ படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் வெளியே சென்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout