17 வயதில் எல்லை மீறிய குழந்தை நட்சத்திரம்.. ஷாக்கிங் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

17 வயதில் புகை பிடிக்கும் புகைப்படங்களை பதிவு செய்து எல்லை மீறிய குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. அதன் பிறகு அவர் ’சைவம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 17 வயதில் டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் சாரா ’கொட்டேஷன் கேங்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

17 வயதில் எல்லை மீறி புகை பிடிக்கும் கேரக்டரில் நடித்த சாராவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் துணிச்சலாக இந்த வயதிலேயே போல்டான கேரக்டரில் நடித்திருப்பதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.