close
Choose your channels

விக்ரம் பட குழந்தை நட்சத்திரம். 20 ஆண்டுகளுக்கு பின் ஸ்காட்லாந்தில் பட்டம்..!

Sunday, July 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் நடித்த ’காசி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. அதன் பின் ’சுந்தரா டிராவல்ஸ்’ ’பீமா’ ’ரேணிகுண்டா’ ’நாளை நமதே’ ’எத்தன்’ ’அலெக்ஸ் பாண்டியன்’ உள்பட பல படங்களில் நடித்த நிலையில் சசிகுமார் நடித்த ’கொடிவீரன்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட பட்டப்படிப்பை முடித்துள்ள சனுஷா, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த பதிவில் ’இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் செய்தேன், தூக்கம் இல்லாமல் இருந்தேன், பார்ட் டைம் வேலைகளுக்கும் சென்றேன், கடினமான பணி காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெற்றோரை பார்க்காததால் மன அழுத்தம் ஏற்பட்டது, ஆனால் அனைத்தையும் கடந்து இன்று பட்டம் பெற்றுள்ளேன், எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நடிகை சனுஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சனுஷா தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment