12 வருடங்களுக்கு பின் திருப்பதி சென்ற 'விக்ரம்' பட நடிகை: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Sunday,June 19 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர், 12 வருடங்களுக்கு பின் திருப்பதி சென்றதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடித்து இருந்த நிலையில் அதில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன். இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் திருப்பதி சென்ற புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். 12 வருடங்களுக்கு பின் திருப்பதி சென்று உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். திருப்பதியில் ஷிவானி நாராயணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஷிவானி நாராயணன் நடித்த ’வீட்டில் விசேஷம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியின் 46வது படம், ’பம்பர்’ மற்றும் வைகை புயல் வடிவேலு நடித்து வரும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


More News

பூஜா ஹெக்டேவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படம்: பெற்றோருக்கு நன்றி சொன்ன ரசிகர்!

தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு

சிம்ரனுக்கு முத்தம் கொடுத்த காதல் கணவர்: இன்று அவருக்கு ஸ்பெஷல் நாளாம்!

நடிகை சிம்ரனுக்கு அவரது காதல் கணவர் தீபக் முத்தம் கொடுத்த புகைப்படம் சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நான் தனியாள் இல்லை, எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி: சாய்பல்லவி வீடியோ

 சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கூறிய மதம் சம்பந்தப்பட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கமளித்து நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'பீஸ்ட்' லீட்? நெல்சன் வைத்திருக்கும் டுவிஸ்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய

'மழை பிடிக்காத மனிதன்’: விஜய்காந்த் காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததா?

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்த 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்