close
Choose your channels

'கூலி' படத்தில் இணையும் இன்னொரு 'விக்ரம்' பிரபலம்.. 'தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்..

Saturday, July 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தில் நடித்த மாஸ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் உள்பட சிலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்திருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்த நடிகர் பகத் பாசில் இணைய இருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்தின் ’வேட்டையன்’ படத்திலும் பகத் பாசில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ரஜினியுடன் ’கூலி’ படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment