நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என்பது உண்மையா? மேனேஜர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்ரம் சற்று முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு என ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என பி.ஆர்.ஓ தெளிவுபடுத்தி நிலையில் தற்போது விக்ரமின் மேனேஜர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ’விக்ரம் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு வணக்கம்! சீயான் விக்ரமுக்கு இலேசான மார்பு அசெளகரியம்தான் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் அவருக்கு மாரடைப்பு இல்லை. இது தொடர்பான வதந்திகளை கேட்டு வேதனை அடைகிறோம். தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்று இனிமேலும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த நேரத்தில் விக்ரம் குடும்பத்திற்கு பிரைவசி தேவைப்படுகிறது.
விக்ரம் தற்போது நலமாக உள்ளார், இன்னும் ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த தகவல் அவர் குறித்த பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விக்ரம் நலமாக இருக்கிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Dear fans and wellwishers,
— Suryanarayanan M (@sooriaruna) July 8, 2022
Chiyaan Vikram had mild chest discomfort and is being treated for the same. He DID NOT have a heart attack as reports falsely claim. We are pained to hear rumours to this effect.
That being said, we request you to give him 1/2
and the family the privacy they need at this time. Our dear Chiyaan is fine now.
— Suryanarayanan M (@sooriaruna) July 8, 2022
He is likely to be discharged from hospital in a day.
We hope this statement provides clarity and trust that the false rumours will be put to rest. 2/2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com