கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்க அழைப்பீர்களா? கமல், விக்ரம் பட நடிகை ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அதற்காக எங்களை படுக்கைக்கு அழைப்பீர்களா? என கமல் மற்றும் விக்ரம் படங்களில் நடித்த நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், அதன் பின்னர் காலப்போக்கில் அவருக்கு திரையுலக வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளங்கள் மூலம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்று பிரத்யேகமாக செயலி வைத்துள்ளார் என்பதும் அதில் பணம் கட்டினால் அவரது கிளாமர் வீடியோக்களை பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நான் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவதால் என்னை பலர் படுக்கைக்கு அழைக்கிறார்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்தால் உடனே படுக்கைக்கு அழைப்பதா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் மட்டுமல்ல எத்தனையோ நடிகைகள் சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள், ஆனால் என்னை மட்டும் ஒரு சிலர் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை, நான் எனக்கு பிடித்த ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்கிறேன், அதற்காக என்னை படுக்கைக்கு அழைப்பதா? இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது’ என்று நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com