'விக்ரம் 60' படத்தின் வில்லன் இவர்தான்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

சியான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அனேகமாக அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் நடிக்க உள்ள 60 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் வில்லன் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விக்ரம்தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அப்படியானால் விக்ரம் இந்த படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்கின்றாரா? அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் 60 படத்தின் திரைக்கதை முழுவதையும் கார்த்திக் சுப்புராஜ் முடித்து விட்டதாகவும் ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கிய உடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

மெக்சிகோவைத் தொடர்ந்து ஜப்பானிலும் ஆரம்பித்து விட்டது!!! 2020 இதோட முடியாது போல...

கொரோனா நோய்த்தொற்று ஒருபக்கம் உலகத்தையே புரட்டி எடுத்து வருகிறது என்றால் இன்னொரு பக்கம் பெருமழை,

2வது நாளாக 3500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 2000ஐ நெருங்கும் சென்னை

தமிழகத்தில் தினமும் கொரோனாவின் பாதிப்பு 100, 200 என இருந்தபோதே அதிர்ச்சி அடைந்த நாம், தற்போது 1000, 2000ஐ தாண்டி தற்போது 3000ஐ தாண்டி வருவதை பார்த்து அதிர்ச்சியின் உச்சகட்டத்திற்கு

சாத்தான்குளம் விவகாரம் குறித்து கருத்து கூறிய இரண்டு முன்னணி தமிழ் நடிகைகள்

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் விசாரணையின்போது மர்மமான முறையில் மரணம் அடைந்தது

போலீஸ் மட்டுமின்றி இவர்களும் குற்றவாளிகள் தான்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து உதயநிதி!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது

கொரோனா நேரத்தில் செல்போன் பத்திரம்: பயமுறுத்தும் தொழில்நுட்பத் தகவல்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியத் தாக்கத்தால் பல பொருட்களின் இறக்குமதி குறைந்து இருக்கிறது.