close
Choose your channels

லோகேஷின் அடுத்த படத்தில் சியான் விக்ரமா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

Saturday, July 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளில் பிஸியாக உள்ளார் என்பது தெரிந்ததே.

அடுத்ததாக அவர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி கார்த்தி நடித்துள்ள ’கைதி 2’ படத்தையும் அவர் விரைவில் இயக்கவுள்ளார். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகமும் லோகேஷ் பட்டியலில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலக பிரபல நட்சத்திரங்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் திரைக்கதை எழுத, அவருடைய உதவியாளர் மகேஷ் சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’லியோ’ படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சியான் விக்ரம் தற்போது வேற லெவலில் புதிய கெட்டப்பில் இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment