'கோப்ரா' இசை வெளியீட்டு விழா: விக்ரமுக்கு பதில் கலந்து கொள்ளும் பிரபலம் இவர் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ’கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.
இசை வெளியீட்டு விழாவில் விக்ரம், ஏஆர் ரகுமான் அஜய்ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென விக்ரமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இன்றைய இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் வருவாரா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் விக்ரமுக்கு பதிலாக அவரது மகன் துருவ் விக்ரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 11ல் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Welcoming our dear #Dada #DhruvVikram for #CobraAudioLaunch @pmcchennai ?? #Cobra https://t.co/vRtcifg1Je
— Seven Screen Studio (@7screenstudio) July 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments