close
Choose your channels

விக்ரம் ஒரு டீச்சர் மாதிரி: கீர்த்தி சுரேஷ்

Tuesday, July 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவான 'சாமி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் பேசியதாவது:

ஹரி படம் என்றாலே படப்பிடிப்பு குழுவே பரபரப்பாக இருக்கும். கொஞ்ச நேரம் கூட யாரும் ரிலாக்ஸ் ஆக இருக்க மாட்டார்கள். அவருடன் பணிபுரிந்தாலே நேரத்தின் மதிப்பை நாம் கற்று கொள்ளலாம். ஹரி எந்த அளவுக்கு எனர்ஜியாக இருப்பாரோ, அவருக்கு இணையாக சுறுசுறுப்பாக இருப்பவர் விக்ரம். அவர் 'சாமி' படத்தில் எப்படி எனர்ஜியாக இருந்தாரோ, அதே எனர்ஜியுடன் தான் இந்த படத்திலும் உள்ளார். மேலும் அவர் தன்னுடைய காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைவருக்கும் நடிப்பில் உதவுவார். சுருக்கமாக சொன்னால் அவர் ஒரு டீச்சர் மாதிரி. எனக்கு பல காட்சிகளில் நடிக்க உதவி செய்துள்ளார்' என்று கீர்த்தி சுரேஷ் கூறினார்.

மேலும் நான் அண்ணன் என்று அடிக்கடி கூப்பிடுவது சூரியைத்தான். அவருக்கும் எனக்கும் இந்த படத்தில் காம்பினேஷன் காட்சிகள் அதிகம் உள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நான் நடித்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களும் சூப்பர் ஹிட். இந்த படத்தோடு சேர்த்து ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். தயாரிப்பாளர் சிபு மற்றும் பிரபு ஆகியோர்களை எனக்கு நான் நடிக்க வருவதற்கு முன்பே தெரியும். குடும்ப அளவில் நெருக்கமானவர்கள். அவர்களுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment