'சிங்கப்பூர்' SIIMA விழாவில் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 28 2016]

'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. முதல்முறையாக இரு வேடங்களில் விக்ரம் நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி மற்றும் ஜூலை 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் SIIMA திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முதல் நாளில் அதாவது ஜூன் 30ஆம் தேதி 'இருமுகன்' படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி அட்டகாசமான டீசரும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.