விக்ரமின் 'இருமுகன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

  • IndiaGlitz, [Sunday,April 24 2016]
'அரிமாநம்பி' ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை, மலேசியா படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் காஷ்மீர் பகுதியில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் காஷ்மீரில் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்தபின்னர் படக்குழுவினர் 'பாங்காக்' சென்று இரண்டு வாரங்கள் படப்பிடிப்பை தொடரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் சீயான் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் முதன்முதலாக விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் நித்யாமேனனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஷிபுதமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.