சீயான் விக்ரமின் 'இருமுகன்'. டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் டிரைலர் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
முதல் ஒருசில காட்சிகளிலேயே இந்த படத்தின் ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே விக்ரம்தான் என்பது டிரைலரில் இருந்து புரிய வருகிறது. 'லவ்' என்ற வித்தியாசமான பெண் தன்மையுள்ளே அதே நேரத்தில் கொடூர வில்லனாக 'லவ்' என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். இது அவருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கே புதியதாக தோன்றுகிறது. மெடிக்கல் க்ரைம்களில் ஈடுபட்டு வரும் 'லவ்' விக்ரமை பிடிக்க 'அகிலன்' என்ற 'ரா' அதிகாரி விக்ரம் எடுக்கும் முயற்சிகள் என்ன? என்பதுதான் 'இருமுகன்' படத்தின் கதை என்று தெரிகிறது.
'அகிலன்' விக்ரமுக்கு உதவியாக நித்யாமேனன் மற்றும் மலேசிய போலீஸ் அதிகாரி தம்பி ராமையா. இருவருக்குமே கேரக்டர்கள் கச்சிதமாக பொருந்தும் வகையில் உள்ளது சிறப்பு.
மேலும் விக்ரமுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாராவின் எண்ட்ரியே அட்டகாசமாக உள்ளது. விக்ரம்-நயன்தாரா கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியுள்ளதையே இந்த டிரைலர் நிரூபிக்கின்றது. இருப்பினும் நயன்தாரா கேரக்டரிலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் வழக்கம்போல் அதிர வைக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு காட்சியின் பிரமாண்டத்திலும் தயாரிப்பாளரின் செலவு புரிகிறது. மொத்தத்தில் இந்த டிரைலர் படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments