சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,February 23 2016]

எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே மாறிவிடும் நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். முதன்முதலாக விக்ரம் இரு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நித்யா மேனனும் நடிக்கின்றார்.


இந்த படத்தின் மலேசிய படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'இருமுகன்' திரைப்படம் வரும் வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் டீசர் ஆகியவை வரும் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசர், தம்பி ராமையா, யூகிசேது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை 'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன்ஸ் தயாரித்து வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் மிக வேகமாக உருவாகி வருகிறது.

More News

பிரபுதேவா தந்தை கேரக்டரில் பிரபல மலையாள இயக்குனர்

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் பல நேரடி தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் நிலையில்...

பிப்ரவரி 28 முதல் ஏரியா மாறுகிறார் வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கிய முதல்படமான 'சென்னை 600 028 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியவதை அடுத்து அதே படத்தில் நடித்த சிவா...

கார்த்தியின் தோழா'வுக்கு கிடைத்த முதல் வெற்றி

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான 'தோழா' படமும் ஹிட்டானால் கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த ஹீரோ பட்டியலில் கார்த்தியும் இணைந்துவிடுவார்...

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை. பிரபல ஹீரோ

'மிருகம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நா காக்க' போன்ற பல படங்களில் நடித்த கோலிவுட்டின் இளம் நாயகன்...

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை...