சென்னையில் ஆரம்பித்து பாங்காக்கில் முடியும் இருமுகன்

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம்பித்து பின்னர் மலேசிய படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக நான்கு பிரமாண்டமான செட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் ஒரு செட்டில் விக்ரம்-நயன்தாராவின் டூயட் பாடலும், மற்ற மூன்று செட்டுக்களிலும் பிரமாண்டமான சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளதாம்.,


மேலும் இந்த படத்திற்கு ஷங்கர் படத்திற்கு இணையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் காட்சிகள் எதுவும் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இயக்குனர் உள்பட யாருக்கும் படப்பிடிப்பில் செல்போன் உபயோகிக்க அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கார் சேஸிங் காட்சி ஒன்று ஆறு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும், இதற்காக 15 கார்களும், பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்ட அனுபவமுள்ள டிரைவர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 'இருமுகன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் பாங்காக்கில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், யூகிசேது, தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஷிபுதமீன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.