சீயான் விக்ரமின் மிகப்பெரிய பிசினஸ் இதுதான்

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அனைத்து எப்.எம் வானொலிகளில் இந்த படத்தின் பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது.
ஆம், 'இருமுகன்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'INkokkadu' படத்தின் தெலுங்கு மாநில ரிலீஸ் ரிலீஸ் உரிமையை நீலம் கிருஷ்ண ரெட்டியின் NKR பிலிம்ஸ் ரூ.11 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுதான் சீயான் விக்ரம் படங்களின் மிகப்பெரிய தெலுங்கு பிசினஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, கருணாகரன், ரித்வைகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.