close
Choose your channels

சீயான் விக்ரமின் 'இருமுகன்'. சென்னை வசூல் நிலவரம்

Monday, September 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச ஓப்பனிங் வசூலை பெற்ற இந்த படம் சென்னையில் இதுவரை வசூலான தொகை குறித்து தற்போது பார்ப்போம்.
'இருமுகன்' கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை அதாவது செப்டம்பர் 18 வரை சென்னையில் ரூ.4,67,15,920 வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் 21 திரையரங்க வளாகங்களில் 273 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.92,07,260 வசூல் செய்துள்ளது. 90% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வார இறுதியிலும் ரூ.1 கோடி வசூலை நெருங்கிவிட்ட இந்த படத்தின் வசூல் மேலும் தொடர்ந்து வருகிறது என்பது ஒரு கூடுதல் தகவல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment