சீயான் விக்ரமின் 'இருமுகன்'. சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச ஓப்பனிங் வசூலை பெற்ற இந்த படம் சென்னையில் இதுவரை வசூலான தொகை குறித்து தற்போது பார்ப்போம்.
'இருமுகன்' கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை அதாவது செப்டம்பர் 18 வரை சென்னையில் ரூ.4,67,15,920 வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் 21 திரையரங்க வளாகங்களில் 273 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.92,07,260 வசூல் செய்துள்ளது. 90% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வார இறுதியிலும் ரூ.1 கோடி வசூலை நெருங்கிவிட்ட இந்த படத்தின் வசூல் மேலும் தொடர்ந்து வருகிறது என்பது ஒரு கூடுதல் தகவல்

More News

சூர்யாவின் 'சிங்கம் 3' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றிகளை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எஸ் 3'. சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

'பைரவா' படத்தில் டான்ஸ் ஆடும் 'பாபநாசம்' நடிகர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த தேதி வெளியாகும் என்பதையும் பார்த்தோம்.

கார்த்தியின் 'காஷ்மோரா' இசை வெளியீடு தேதி என்ன?

கார்த்தி இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'காஷ்மோரா' என்றால் அது மிகையாகாது...

கவுண்டமணி உடல்நலன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

காமெடி கிங் கவுண்டமணி உடல்நலம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது...

'S3' படத்தில் சூர்யாவின் அறிமுகப்பாடல் இதுதான்!!

சூர்யா நடித்து வரும் 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'S3' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது...