விக்ரமின் சம்பவம் ஆரம்பம்.. 'வீர தீர சூரன்' முதல் நாள் படப்பிடிப்பு வீடியோ..! யார் யார் கலந்து கொண்டார்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிக்க இருக்கும் ’வீர தீர சூரன்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் மூன்று நிமிடம் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய வீடியோவை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் படப்பிடிப்புக்கு வரும் விக்ரம் முதலில் கேரவன் செல்வது போன்றும், அதன்பின் படப்பிடிப்புக்கு வரும் துஷாரா விஜயன் கேரவனுக்கு செல்வது போன்றும் இருவரும் மேக்கப் போட்டு விட்டு திரும்பி வந்தவுடன் முதல் காட்சியை இயக்குனர் அருண்குமார் படமாக்கியதும் இந்த வீடியோவில் உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மிக குறைந்த நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் அவருடைய காட்சியின் பட படிப்பை விரைவில் படமாக்கப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் இணைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேறு சில முக்கிய நட்சத்திரங்களும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#VeeraDheeraSooran shooting has started with a bang and is in full swing! 🎥🔥 Can't wait to see the magic unfold on screen.@chiyaan #Kaali #காளி
— HR Pictures (@hr_pictures) April 26, 2024
Veera Dheera Sooran
An #SUArunkumar Picture
A @gvprakash musical
@iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara… pic.twitter.com/BIQiu0TBOE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com