பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் விக்ரம், துருவ் விக்ரம் படங்களின் படப்பிடிப்பு.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்து வரும் ’வீர தீர சூரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பக்கத்து மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் தான் துருவ் விக்ரம் நடித்து வரும் ’பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
‘சித்தா’ படத்தை இயற்றிய அருண்குமார் இயக்கத்தில் ’வீர தீர சூரன்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் விக்ரம் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இங்கு படப்பிடிப்பு நடந்த இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் கழித்து முதல் பாகம் வெளிவரும் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பக்கத்து மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் தான் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பைசன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் விக்ரம் மற்றும் அவரது மகன் படப்பிடிப்பு நடந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments