சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

சியான் விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கிறிஸ்துமஸ் தினத்தை அடுத்து பொங்கல் தினத்தில் தான் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' உள்பட பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், இடையில் நீண்ட இடைவெளி இருப்பதால் கிறிஸ்துமஸ் நாளை தவறவிடாமல் 'ஸ்கெட்ச்' படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு தளபதி உருவாக எத்தனை வருசம்? பிரபல கவிஞரின் மகன்

'ஒரு குழந்தை உருவாகறதுக்கு பத்து மாதம், ஒரு பட்டதாரி உருவாகறதுக்கு மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது'

டாக்டர் கேரக்டரில் முதன்முதலாக த்ரிஷா

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, தற்போதைய இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் 6 தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.

2.0 எமிஜாக்சனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும்

'மெர்சலை அடுத்து டுவிட்டர் இமோஜியை பெறும் 2 படங்கள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பெயரில் டுவிட்டர் இமோஜி பெற்ற ஒரே படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

'விவேகம்' படத்தை பின்தொடரும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதியின் புதிய படமான 'ஜூங்கா' திரைப்படம் தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. 'வனமகன்' சாயிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்