ஹாலிவுட் ரீமேக்கில் சீயான் விக்ரம்?

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சாமி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் ஹாலிவுட் படமான 'டோண்ட் ப்ரீத்' என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ராஜேஷ் எம்.செல்வாவின் முந்தைய படமான 'தூங்காவனம்' படமும் 'ஸ்லீப்லெஸ் நைட்' என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.