'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா? இன்னும் ஒரு வாரத்தில் சியான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படம் ரிலீசுக்கு முழுமையாக தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் வரும் 17ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கும் நிலையில் இந்த இசை நிகழ்ச்சியின் போது ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் அதே விழாவில் இரண்டு பாடல்களையும் ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.