விக்ரம் நடிக்கும் ஹிந்தி படம் குறித்த மாஸ் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் கூட பாலிவுட்டில் ஹிந்தி திரைப்படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் தற்போது பாலிவுட் திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்பை உடனடியாக முடித்துக்கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பினார். இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் ரஷ்யாவில் இன்னும் எடுக்கப்பட வேண்டி இருந்தாலும் தற்போது ரஷ்யா இருக்கும் நிலையில் அங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பது இயலாத காரியம் என்பதால் சென்னையிலேயே கிரீன் ஸ்கிரீன் வைத்து இந்தப் படத்தின் மீதி பகுதியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’கோப்ரா’ திரைப்படம் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய ’ராவண்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய இந்தி திரைப்படங்களில் விக்ரம் நடித்திருக்கிறார் என்றாலும் ’கோப்ரா’ படத்தின் மூலம் மீண்டும் மாஸ் ஆக பாலிவுட் திரையுலகில் விக்ரம் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி குறித்த ஆச்சரியமான தகவல்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்

கடந்த 2ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62

அசோக்செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்க காத்திருக்கின்றனர். ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் அவர்கள் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிடுவார்கள்

கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும்: ஆன்லைன் வகுப்பு குறித்து பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை