சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சியான் விக்ரம், ’டிமாண்டி காலனி’, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தின் ’கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் இருந்து தொடங்கப் போவதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்து ’மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படப்பிடிப்பிற்கு பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’கோப்ரா’ இந்த சூப்பர் அப்டேட் காரணமாக விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது..