உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படமாகும் 'கோப்ரா'

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ‘கோப்ரா’படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் விக்ரம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது போன்ற காட்சி படமாக்கப்படவுள்ளது. இந்த பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது என்பதும் இதில் பல பிரபலங்கள் படித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி மற்றும் மியா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சீயான் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

More News

முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து!

தமிழக சட்டச்சபைத் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் இணையும் 'எல்.கே.ஜி' நடிகை!

நடிகர் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் அடுத்த திரைப்படம் 'பாதாய் ஹோ' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்திற்கு அவர் 'வீட்ல விசேஷங்க' என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

திமுக சார்பில் போட்டியிட தமிழ் திரைப்பட ஹீரோவின் மனைவி விருப்பமனு!

தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்தியச் சிறுமி!

உலகிலேயே உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடுத்து 2 ஆவது உயரமான மலை சிகரமாகக் கருதப்படுவது

கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு… வைரல் தகவல்!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டிவிட்டது.