3:3:3: 'கோப்ரா' படத்தின் ரன்னிங் டைம் சுவாரஸ்யம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைம் தகவலில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட உள்ளதால், இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3:3:3: எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 3 வினாடிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதை சுவாரஸ்யமாக ரசிகர்கள் கருதியுள்ளனர்.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
#Cobra is a genius Mathematician ??
— Seven Screen Studio (@7screenstudio) August 27, 2022
Censored with U/A ??
Runtime : 3️⃣:3️⃣:3️⃣@chiyaan @AjayGnanamuthu @arrahman @RedGiantMovies_ @Udhaystalin @SrinidhiShetty7 @IrfanPathan @dop_harish @SonyMusicSouth @proyuvraaj #CobraFromAugust31 pic.twitter.com/x6iz6Lm4Se
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments