ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் 'கோப்ரா'? படக்குழுவினர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் சமீபத்தில் ரஷ்யாவில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற புதிய கட்டுப்பாடு வந்து உள்ளது, இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ‘கோப்ரா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து ‘கோப்ரா’ படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Fake News !! https://t.co/RCbW2EuSZH
— Seven Screen Studio (@7screenstudio) April 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com