அஜித்தை அடுத்து ரிஸ்க் எடுக்கும் சீயான் விக்ரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்புகளை தமிழ் திரையுலகினர் உட்பட இந்திய திரையுலகினர்கள் அனைவருமே தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜித்தின் ’வலிமை’ படக்குழுவினர் ரிஸ்க் எடுத்து ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு படப்பிடிப்பை நடத்த விரைவில் வெளிநாடு செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் அஜித்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் ’கோப்ரா’ படக்குழுவினரும் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். ஏற்கனவே ரஷ்யாவில் 15 பேர்களுக்கு மேல் கொரோனா தாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் படக்குழுவினர்கள் ரஷ்யா செல்ல அதிரடியாக முடிவு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் இந்த நாட்டில் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் அட்டகாசமான 7 கெட்டப்புகளில் இருந்தது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout