விக்ரமின் 'கோப்ரா' புதிய ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு1
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் வரை படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Cobra ?? (Tamil-Telugu-Kannada) In Theatres Worldwide From August 31 ??#CobraFromAugust31#ChiyaanVikram
— Seven Screen Studio (@7screenstudio) August 9, 2022
An @AjayGnanamuthu Film??
An @arrahman Musical??@RedGiantMovies_ @Udhaystalin @NVR_Cinemaoffl @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth @UrsVamsiShekar @proyuvraaj pic.twitter.com/IUIIiTkoCB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com