கமல்ஹாசனை மிஞ்சிய விக்ரம்: மிரட்டும் 'கோப்ரா' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில் ’டிமாண்ட்டி காலனி’ ’இமைக்காநொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் ’கோப்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விக்ரம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள் சேர்த்து மிரட்டியுள்ளது தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்து இருப்பார் என்பது தெரிந்ததே. அதனை மிஞ்சும் வகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் 8 கெட்டப்புகளில் உள்ளார். ஒரே ஒரு கெட்டப் மட்டும் பின்புறமாக இருக்கும் நிலையில் மீதியுள்ள 7 கெட்டப்புகளின் முகங்கள் தெரிகின்றன.
அதில் மூன்று கெட்டப்புகளில் வயசான வேடமாகவும் மூன்று கெட்டப்புகளில் நடுத்தர வயதை உடைய கெட்டப்பாகவும், ஒரு கெட்டப் ரொமான்ஸ் வாலிபர் போன்றும் உள்ளது. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் அனைத்து கெட்டப்புகளும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரே இந்த அளவுக்கு மிரள வைத்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படம் இவ் வருடம் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Glad to reveal the first look of the Film #Cobra#CobraFirstLook #ChiyaanVikram @AjayGnanamuthu @7screenstudio @Lalit_SevenScr @IrfanPathan @SrinidhiShetty7 @theedittable @Harishdop @SonyMusicSouth pic.twitter.com/gKJ35WNyCw
— A.R.Rahman (@arrahman) February 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments