சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': நீண்ட இடைவெளிக்கு பின் மாஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இடையில் சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதன் பின்னர் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் கௌதம் மேனன் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’துருவ நட்சத்திரம் சாப்டர் ஒன் யுத்த காண்டம்’ என்று படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போஸ்டரில் விக்ரம் தனது குழுவினருடன் அட்டகாசமாக இருக்கும் போஸ் இருப்பதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் பிரிட்டிஷ் நடிகர் பெனடிக் கார்ரெட் என்பவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Wishing @chiyaan a very Happy Birthday!#DhruvaNatchathiram @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru @manojdft @srkathiir @the_kochikaran @editoranthony @riturv @realradikaa @SimranbaggaOffc @rparthiepan @DhivyaDharshini @rajeevan69 @Kumar_gangappan @Kavithamarai @utharamenon5 pic.twitter.com/TmfW15RxCe
— Gauthamvasudevmenon (@menongautham) April 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments