கார் விபத்து: விக்ரம் தரப்பின் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று ஆட்டோக்கள் சேதமாகி ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஒருசிலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரம் மகன் துருவ்வை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் விக்ரம் ரசிகர் மன்ற தலைவரிடம் இருந்து இந்த கார் விபத்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்'
இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com