சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைகிறார் 'விக்ரம்' பிரபலம் ஏஜண்ட் டீனா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டரில் நடித்த நடிகர் நடிகைகள் கூட பெரும் பிரபலம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ’விக்ரம்’ படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய ஏஜண்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்த வசந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வசந்திக்கு தமிழ் மலையாளம் உள்பட ஒரு சில மொழிகளில் படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த திரைப்படமான ’கிறிஸ்டோபர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வசந்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மம்முட்டியுடன் மூன்று நாயகிகள் நடித்து வரும் நிலையில் வசந்தி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’கிறிஸ்டோபர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

More News

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு சென்ற பிரபல இயக்குனரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல இயக்குனரின் படத்தையும் ரிலீஸ் செய்ய

பொன்னியின் செல்வன்: விக்ரம் பிரபு, பிரபு, லால் கேரக்டர்களின் அட்டகாசமான போஸ்டர்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும்

என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

என்னால் இந்த படத்தில் ஒன்றிப்போக முடிகிறது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திர நகர்கிறது' என்ற படத்தை பார்த்தபின் தெரிவித்துள்ளார். 

அமீருடன் திருமணமா? வெற்றி கோப்பைக்கு பின் புரபோஸ் செய்த பாவனி ரெட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அமீரை திருமணம்

நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்: மறைந்த கலைஞரை வணங்கிய புகழ்-பென்சியா தம்பதி!

நீங்கள்தான் எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும் என விஜய் டிவி மறைந்த கலைஞரின் புகைப்படம் முன் புகழ்-பென்சியா தம்பதிகள் வணங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.