முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த பிரபல இயக்குனர்.. விளக்கமாக பதிலளித்த விக்ரம்..!
- IndiaGlitz, [Monday,May 22 2023]
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விக்ரம் மீது முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் அதற்கு நடிகர் விக்ரம் விளக்கமாக தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான ’கென்னடி’ என்ற திரைப்படம் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்த மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் இந்த படம் குறித்து அனுராக் காஷ்யப் பேசியபோது ’கென்னடி’ என்ற திரைப்படத்திற்கு பெயர் காரணமே நடிகர் விக்ரம் தான். அவருடைய உண்மையான பெயர் கென்னடி என்பதால் அவரை மனதில் வைத்து தான் இந்த படத்தின் கதையை எழுதினேன். அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தேன். ஆனால் விக்ரம் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் தான் ராகுல் பட் இடம் இந்த கதையை சொன்னேன் என்று கூறினார்.
இயக்குனர் அனுராக் காஷ்யப் வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு சற்றுமுன் நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளார். ’இந்த படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்பதையும் நான் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று நீங்கள் சொன்னதையும் கேள்விப்பட்டேன். உங்களிடமிருந்து எனக்கு எந்த விதமான மின்னஞ்சல் மற்றும் மெசேஜ் வரவில்லை. நீங்கள் என்னை தொடர்பு கொண்ட இமெயில் ஐடி செயலில் இல்லை. அதற்கு முன்பு என்னுடைய மொபைல் எண்ணும் மாறிவிட்டது. இது குறித்து உங்களிடம் ஏற்கனவே நான் விளக்கம் அளித்துள்ளேன். உங்கள் ’கென்னடி’ படத்தை திரையில் பார்க்க நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன், ஏனெனில் அதில் என்னுடைய பெயரும் இருப்பதால்.. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.