கருணாநிதி முன்னிலையில் விக்ரம் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

நடிகர் சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்ரம் மகள் அக்சிதாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் மணமகன் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்  மு.க.முத்துவின் மகள்வயிற்று பேரன் ரஞ்சித் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மானுரஞ்சித்-அக்சிதா திருமணம் வரும் நவம்பர் 2ஆம் தேதி கருணாநிதி முன்னிலையில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திருமணத்திற்கு அடுத்த நாள் கிறிஸ்துவ முறைப்படி சடங்குகள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருமணம் முடிந்த ஒருவாரம் கழித்து கேரள முறைப்படியும் ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் சொந்த ஊரிலும் ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விக்ரமின் குடும்பமே அக்சிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருக்கும் நிலையில் விக்ரம் தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.