'விக்ரம்' விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருந்தவர் இவரா? 'கட்டிங் பிளேயர்' சொன்ன ஆச்சரிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தவர்கள் கூட மனதில் தங்கும் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் கேரக்டர்களை அமைத்து இருந்தார் என்பதும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய் சேதுபதியின் வலது கையாக வரும் ஜாபர் சாதிக் என்பவர் தனது எதிராளிகளை திடீரென காலில் கட்டிங் பிளேடு வைத்து கட் செய்து அவர்களை கொல்லுவார். கடைசியில் கமல்ஹாசனையும் அதேபோல் கொல்ல முயற்சிக்கும் போதுதான் ஒரு திருப்பம் ஏற்படும் என்பது படம் பார்த்தவர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ஜாபர் சாதிக் அளித்த பேட்டியில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் ‘சந்தானம்’ கேரக்டரில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பிறகுதான் இந்த படத்தில் விஜய் சேதுபதி வந்தார் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரில் பிரபுதேவா அல்லது ராகவா லாரன்ஸ் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்து கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

நயன்தாராவின் மெஹந்தி நிகழ்ச்சி: விருந்தினர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை காலை நடைபெற இருக்கும் நிலையில் நேற்று முதல் இந்த திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற தொடங்கி

சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை: எத்தனை கோடி தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு நடிகை

கோடியில் புரளும் கால்பந்து வீரரின் டிஸ்ப்ளே உடைந்த மொபைல்: என்ன காரணம் தெரியுமா?

தற்போது நடுத்தர வர்க்கத்தினர் கூட மொபைல் போனில் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் உடனே அந்த மொபைல் போனை தூக்கி போட்டு விட்டு புதிய மொபைல் போனை வாங்கி கொண்டிருக்கும்

ரூ.3.50 கோடி சம்பளம் உள்ள வேலையை உதறிய இளைஞர்: காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணத்தை அவர் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அப்ப சூர்யா ரோலக்ஸ் இல்லையா? அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.